×

கலிபோர்னியாவில் வெள்ளப்பெருக்கு

சான்டா பார்பரா: கலிபோர்னியா மாகாணம் கிறிஸ்துமஸ் கொண்டாடட்டத்துக்கு தயாராகிக்கொண்டு இருந்த நிலையில், கடலோர பகுதிகளை பசிபிக் புயல் தாக்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. டிசம்பர் மாதம் முழுவதுமான சராசரியான 6.5செ.மீ. மழையை காட்டிலும் இது அதிகமாகும்.

போர்ட் ஹீயெனிமே, ஆக்நார்ட் மற்றும் சான்டா பார்பரா பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. .மேலும் சான் டியாகோவில் இருந்து மொஜாவே வரையிலான பகுதிகளுக்கு வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டது. அரிசோனாவின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் விடுமுறைகால ஷாப்பிங் செல்வதற்கு தயாரான நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது. இதனால் பலர் வீடுகளில் முடங்கினர்.

The post கலிபோர்னியாவில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : California ,Santa Barbara ,Christmas ,Pacific ,
× RELATED அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம்...